பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் பெருமாள் கோயில்
தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது கூடலழகிய பெருமாள் கோயில். இது ராமாயணக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். வெள்ளியன்று வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்த்த கலவையால் காப்பு சாத்துகின்றனர். மூலவர் கூடலழகர் என்றும், உற்சவர் சுந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு பெருமாளுக்கு துளசி மாலையும், வஸ்திரமும் அணிவிக்கின்றனர்.