செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு (செய்முறை) .
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும். பின்னர் தனியா, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுத்து அரைத்து, இந்த கலவையை இதனுடன் கொட்டி 3 நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி. இதை சூடான சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.