சென்னை ஆவடியில் உள்ள விமானப்படை நிலைய வளாகத்தில் கிளார்க் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெல்லியை சேர்ந்த மகேந்திரபாபு என்பவருக்கு பதிலாக, ஹரியானாவை சேர்ந்த சுஷில் என்பவர் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் வெற்றிபெற்று பணி கிடைத்தால் ரூ.3 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு