கிணற்றில் தவறி விழுந்த தாய், மகள் உயிரிழப்பு

60பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த தாய், மகள் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சென்னாக்கல் பாளையத்தில் 40 அடி ஆழக் கிணறு ஒன்று உள்ளது. அதில், தாய் மற்றும் மகள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற தாய் மயிலாத்தாள் (85) எதிர்பாராத விதமாகக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றக் கிணற்றில் இறங்கிய மகள் புஷ்பவல்லி நாயகியும் (65) தவறி விழுந்துள்ளார். இருவரது சடலங்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி