பூமியில் உள்ள ஒரே அழியாத உயிரினம் திரிட்டோபசிஸ் டோர்னி என்னும் ஜெல்லி மீன்கள் தான். முதுமையினால் ஏற்படக்கூடிய இயற்கையான மரணம் இந்த இனத்திற்கு கிடையாது. எனவே இதை ஆங்கிலத்தில் ‘இம்மார்ட்டல் ஜெல்லி மீன்’ என அழைக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, இந்த மீன்கள் அதன் உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுமை செல்களாக மாற்றி முதுமையை முற்றிலும் குறைக்கிறது. இதனால் இந்த மீன்கள் வயதாகி இயற்கை மரணங்கள் அடைவதில்லை என கூறப்படுகிறது.