நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு நாளை மறுநாள் (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாட்டுக்கு பொதுமக்களின் ஆதரவை சேர்க்க, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு டீ டோக்கன் வழங்கினர். அங்குள்ள குறிப்பிட்ட டீக்கடையில் டோக்கன் கொடுத்து இலவச டீ பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த டீ டோக்கன் வழங்கப்பட்டது.