4 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை

55பார்த்தது
4 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 25) பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய டானா புயல் ஒடிசாவின் பிடர்கனிகா மற்றும் தமரா அருகே, பலத்த காற்றுடன் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி