முசிறி - Musiri

தொட்டியம் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு

தொட்டியம் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு

தொட்டியம் பகுதியில் நடைபெறும் நெடுஞ்சாலை துறை பணிகளை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் ஆய்வு செய்தார். நெடுஞ்சாலை துறை சார்பில் முசிறி நெடுஞ்சாலை உட்கோட்டதில் சாலை அகல படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வளர்ந்து வரும் ஊரான தொட்டியம் பகுதியில் இருந்து காட்டு புத்தூர் செல்லும் சாலை 5. 50 மீ அகலமாக இருந்தது. தற்போது அப் பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு 5. 50 மீ அகலம் உள்ள சாலையை 7. 0 மீ அகலம் உள்ள சாலையாக மாற்றும் பணி நடைபெற்று முடிவுற்றது. இப்பணிகளை சென்னை - நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சத்ய பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் விவரம் கேட்டு அறிந்தார். ஆய்வின் போது திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில், கோட்ட பொறியாளர் கண்ணன், தர கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சந்திர சேகர், உதவி கோட்ட பொறியாளர் பிரபாகர் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் ஜோதிபாசு மற்றும் உதவி பொறியாளர்கள் கோமதி, லோகநாயகி, ஶ்ரீராம், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்

வீடியோஸ்


నల్గొండ జిల్లా