திருச்சி: அம்மா பூங்காவின் அவல நிலை

82பார்த்தது
திருச்சி: அம்மா பூங்காவின் அவல நிலை
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் எம் களத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மைக்கேல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 2016 -17 ஆம் ஆண்டு தாய் திட்டத்தின் மூலம் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது.

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதற்கு எதுவாக கட்டப்பட்டுள்ள இந்த அம்மா பூங்காவானது பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் முளைத்தும் அருகில் இருப்பவர்கள் ஆடு மாடுகள் கட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதன் அருகில் 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடமும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே இதனை தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்தி