உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் டிராக்டர் விபத்தில் ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜன.11) சிறுமி ஒருவர் தனது ஒரு வயது தம்பியுடன் கடைக்குச் சென்றார். அப்போது, அங்கு நின்று இருந்த டிராக்டரை சிலர் இயக்கிய நிலையில், கடைக்கு வெளியே இருந்த சிறுமி மற்றும் குழந்தையின் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.