சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த 50 வயது பெண்ணுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். வேலை தேடி வந்த அவர் போதையில் மருத்துவமனை வளாகத்தில் படுத்திருந்த நிலையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.