நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பருத்திக் கொட்டைகளை வாங்கி சுத்தம் செய்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசியை தண்ணீரில் வேக வைப்பதற்கு பதிலாக பருத்திப் பாலில் வேக வைத்து, அதில் கருப்பட்டி, ஏலக்காய், நெய் சேர்த்து, வறுத்த முந்திரி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கினால் சுவையான 'பருத்திப்பால் பொங்கல்' தயார். இந்த பொங்கல் பண்டிகைக்கு இந்த பொங்கலை முயற்சி செய்து பாருங்கள்.