மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை (ஜன. 14) நடைபெறவுள்ள நிலையில் 2,035 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். இதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெற்றது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. காளையின் உரிமையாளர்கள், வீரர்கள் டோக்கனை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.