மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாவுக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாயார் மீதும் போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. சிறுமியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஷாவை போலீசார் தேடுகின்றனர்.