தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "பெரியார் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகனின் இக்கருத்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: பாலிமர்