துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் அஜித், "அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி. நண்பர்கள், ரசிகர்கள், குடும்பம் என அனைவருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. அஜித்குமார் ரேசிங் மேலும் பல வருடங்களுக்கு இங்கு இருக்கும் . மேலும், என் மனைவி ஷாலுக்கு மிக்க நன்றி என்னை ரேசிங் ஓட்ட விட்டதற்கு" என கூறினார்.