நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் தொடக்கம்
நடிகை சமந்தாவை பிரிந்த நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஆக.08ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து, திருமணம் எப்போது? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், இன்று தன் வீட்டில் திருமணத்திற்கான சடங்குகள் செய்யும் புகைப்படங்களை சோபிதா துலிபாலா வெளியிட்டுள்ளார். இதனால் இன்னும் சில நாட்களில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.