ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவுக்கு ராணுவ உதவியை வடகொரியா செய்து வருகிறது என தகவல் வெளியானது. மேலும் ராணுவ வீரர்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி வருவதாகவும், இது போரை தீவிரப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனால், போர் நீடிக்குமே தவிர, உலக அளவில் ஒருவருக்கும் பலன் ஏற்படாது என கூறியுள்ளார். நட்பு நாடுகள் இதற்கு பதில் தரவேண்டும் எனவும் அவர் கூறினார்.