ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமய நல்லிணக்க பெருவிழா.
அனைத்து மதத்தினரும் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமய நல்லிணக்க விழாவும் மிலாடி நபி விழாவும் விமரிசையாக நடைப்பெற்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார ஜமாத் உலமா சபை மற்றும் வட்டார முஸ்லிம் ஜமாத் மற்றும் மக்கள் ஒற்றுமை இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து முத்தாலம்மன் கலையரங்கில் நடைபெற்ற, விழாவில் மயிலாடுதுறை வள்ளலார் கோவில் கட்டளை தருமபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ,
தமிழ்நாடு ஜமாத் உலமா சபை மாநில துணை பொதுச் செயலாளர் இலியாஸ்ரியாஜி கிறிஸ்தவ பங்குத்தந்தை இளங்கோ, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் நலத்திட்ட உதவிகளாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு படுக்கைகளும், நூலகங்களுக்கு புத்தகங்களும், குழந்தை காப்பகங்களுக்கு குடிநீர் தொட்டி, உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.