சென்னை 28, கோவா, மாநாடு, மங்காத்தா, உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு, கடைசியாக நடிகை விஜய்யை வைத்து இயக்கிய கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினியைச் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கோட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பேசி பாராட்டினார். கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.