திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி எதிர் மார்க்கத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாது. இக்கோர விபத்தில் நல்வாய்ப்பாகக் காரை ஓட்டிச்சென்ற கரூரைச் சேர்ந்த இளைஞர் உயிர் தப்பினார். கார் ஓட்டிச் செல்லும்போது கண்ணயர்ந்ததே விபத்துக்குக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.