தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரில் (10-19 வயது) 50% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகையால், நடத்தைகளில் மாற்றம், கவனக் குறைவு, வளர்ச்சியில் தாமதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். மேலும், சோர்வு, வெளிர் தோல், நகங்கள் உடைதல் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கலாம்.