விருதுநகர்: இடப் பிரச்சினை காரணமாக இருவருக்கிடையே மோதல்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் பேச்சி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சார்ந்த கருப்பையா என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையா மற்றும் மனோரமா ஆகிய இருவரும் பேச்சியை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். பேச்சி அளித்த புகாரின் அடிப்படையில் ஆவியூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.