போதை பொருட்கள் வேண்டாம், நலமான வாழ்க்கை வேண்டும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் நம் ஆரோக்கியத்திலும் நலனிலும் உள்ளது. அதற்கு பாதகமான போதைப் பழக்கங்களை விலக்க வேண்டும். மாற்றத்தை இன்றே தொடங்குங்கள், உங்கள் வாழ்க்கையை உங்களின் நல்ல முடிவுகளால் உருவாக்குங்கள்.
விருதுநகர் மாவட்டம் உருவாக்கிய இந்த விழிப்புணர்வு வீடியோ மூலம், போதைப் பழக்கத்தின் ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து மீளுவதின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறோம். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அறிவியல் பூர்வமான மருத்துவ சிகிச்சைகளின் மூலம் அவர்களை மீட்டு நலமான வாழ்க்கையை பரிசளிக்கலாம். தனிநபர், குடும்பம், சமுதாயம் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, போதையற்ற சிறந்த சமூகத்தை உருவாக்குவோம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது