உத்தர பிரதேசம் ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் போலீசில் அளித்த புகாரில், என் கணவர் அண்மையில் மது போதையில் தனது நண்பருடன் வீட்டிற்கு வந்தார். அவர் நண்பரை வைத்து என்னை பலாத்காரம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்தார். பின்னர் ரூ. 2 லட்சம் பணம் கேட்டு என்னை மிரட்டினார், பணம் தரவில்லை என்றால் ஆன்லைனில் வீடியோவை வெளியிடுவேன் என கூறுவதாக தெரிவித்தார். புகாரின் பேரில் இருவரையும் போலீசார் நேற்று (நவ. 20) கைது செய்தனர்.