பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

83பார்த்தது
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழ நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம், நடமாடும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்  டைகள் போன்ற சுயதொழில்கள் மூலமாக நிலையான வருமானம் பெற, அவர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் வண்ணம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ. 50, 000/- வீதம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி, சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள கீழ்கண்ட தகுதிகளை உடைய பயனாளிகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இ-சேவை மையம் அல்லது கைபேசி வாயிலகவோ tnwidowwelfareboard. tn. gov. in  என்ற இணையதளத்தின் மூலம் முதலில் கீழ்கண்ட அசல் சான்றிதழ்களை இணைத்து பதிவு செய்ய வேண்டும். பின்பு அசல் கருத்துரு நகலினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில்  சமர்ப்பிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி