விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் மறையூர் சத்திரத்தில் விருதுநகர் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மறையூர் சத்திரத்தில் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்த எழுத்து முறைகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அந்த கல்வெட்டு சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரிய வந்தது. மேலும் அந்த கல்வெட்டில் உள்ள எழுத்துகளில் இந்த பகுதியானது ஆதிச்சநல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது எனவும், அப்பகுதியில் உள்ள நஞ்சை, புஞ்சை என இரு வகையான நிலங்களை
பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.