சிவகாசி: மனநிலை பாதித்த பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை...

51பார்த்தது
சிவகாசி அருகே மனநிலை பாதித்த பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை. இரயில்வே போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே மனநிலை பாதித்த பெண் இரயிலின் முன் விழுந்து பெண் தற்கொலை. மயிலாடுதுறை -செங்கோட்டை இரயில் நேற்று மாலை திருத்தங்கல் ரயில் நிலையத்தை நெருங்கும் போது 42 வயதுடைய பெண் ஒருவர் இரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் பொன்குமார் மற்றும் இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் சடலத்தை கைப்பற்றி அவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். இதை அடுத்து இன்று அவர் யார் என அடையாளம் தெரிந்தது. இறந்த நபர் திருத்தங்கல் சுப்பிரமணியர் கோவில் தெருவில் சேர்ந்த கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள் என தெரிந்தன. மேலும் பேச்சியம்மாவின் கணவர் கருப்பசாமி மற்றும் மகன் மணி ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இறந்து விட்டனர். இந்நிலையில் பேச்சியம்மாள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் இரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி