சேலம் என்றதும் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். 'மாங்கனி நகரம்' என்று சேலம் அழைக்கப்படும் நிலையில் அங்கு விளையும் மாம்பழங்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. சேலம் மாங்கனிகள் சுவையாக இருப்பதற்கு அந்த மண்ணில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதே காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆங்கிலேயர்கள் சில வட்டாரங்களில் மாமரங்களை அதிக அளவில் நடுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். இது தான் சேலம் மாம்பழங்களின் தொடக்க புள்ளியாக இருந்தது.