விருதுநகர் மாவட்டத்தில்
ஊட்டச்சத்து குறைபாடுடைய 2200 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்
"ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ரூ. 22 கோடியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், சாலை மறைக்குளம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இத்திட்டத்தை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவது நமது எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் உள்ள கடமை என்றும் எதிர்கால தலைமுறையை நோயற்ற தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்காத விதத்தில் பல்வேறு பட்ட நோய்கள் வருகிறது என்றும் நம் தலைமுறையில் எதிர்பாராத கொரோனா தொற்று வந்து மக்கள் பட்ட துயரத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் காலநிலையால் இப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்போது அவற்றையெல்லாம் எதிர்கொள்ளக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அதற்கான முன்னெடுப்பாக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுவதாகவும்
தாய்மார்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.