ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஆக்கிரமிப்பு செய்த ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்களை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பெயரில் பட்டா பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக மாவட்டம் தோறும் கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் நியமனம் செய்தனர். மேலும் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான 388 ஏக்கர் நிலம் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி கோசாகியார் பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் கோயில் பெயரில் நிலங்களை இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் மாற்ற அறங்காவலர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்களையும் கோயில் பெயரில் மாற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று (செப்.,11) மாலை கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் நில அளவையர் அழகு முத்துக்குமார் ஆகியோர் கோயில் நிலங்களை ஆய்வு செய்து, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 12, 2024, 15:09 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

'மீண்டும் மஞ்சள் பை' எழுத்து வடிவத்தில் நின்று விழிப்புணர்வு

Sep 12, 2024, 15:09 IST
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, அனைவரும் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் உமாராணி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவியர்கள் தங்கள் கைகளில் மஞ்சள் பை ஏந்தியவாறு "மீண்டும் மஞ்சள் பை" என்ற எழுத்து வடிவத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அனைவரும் மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துவோம் என்பதை உணர்த்தும் வகையில், மாணவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் பையை கையில் ஏந்தி பிடித்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. ‌ இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.