ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஆக்கிரமிப்பு செய்த ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்களை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பெயரில் பட்டா பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக மாவட்டம் தோறும் கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் நியமனம் செய்தனர். மேலும் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான 388 ஏக்கர் நிலம் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி கோசாகியார் பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் கோயில் பெயரில் நிலங்களை இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் மாற்ற அறங்காவலர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்களையும் கோயில் பெயரில் மாற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று (செப்.,11) மாலை கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் நில அளவையர் அழகு முத்துக்குமார் ஆகியோர் கோயில் நிலங்களை ஆய்வு செய்து, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 13, 2024, 02:09 IST/விருதுநகர்
விருதுநகர்

திமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்குவாந்தி மயக்கம்

Sep 13, 2024, 02:09 IST
மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நேற்று (செப்.,12) காலை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2,000 பேருக்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அப்போது நலத்திட்ட உதவிகளாக வழங்கிய சில்வர் தம்பால தட்டுடன் டப்பாவில் அடைக்கப்ட்ட்ட சிக்கன் பிரியாணி, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இதனை வாங்கி சென்ற பெண்கள் பள்ளி முடிந்து வந்த தங்களது குழந்தைகளுடன் பிரியாணியை சாப்பிட்டதாக தெரிகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 25 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில் முதல்நாள் இரவே பிரியாணியை தயாரித்து டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டதால் பிரியாணி கெட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.