ஆந்திராவில் உள்ள சிராளா கிராமத்தில் 'நாக பஞ்சமி' பண்டிகையின்போது நூற்றுக்கணக்கான நல்ல பாம்புகளைக் கொண்டு வந்து வைத்து விமரிசையாக நாக பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். இந்த வழிபாடு எப்போது யாரால் தொடங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பல நூறு வருடங்களாக இப்படி உயிருள்ள பாம்புகளை வைத்து நாக பஞ்சமியை கொண்டாடுகின்றனர். கிராம மக்கள் விஷப்பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.