ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: க்யூ கோட் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி துவக்க விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து காணிக்கையை செலுத்தும் வசதியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிவனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது பக்தர்கள் எளிதாக காணிக்கைகளை நேரடியாக கோயில் நிர்வாகத்தின் கணக்கிற்கு செலுத்துவதற்கான புதிய முயற்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்பாடு செய்து அவர்களின் மூலம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து காணிக்கையை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தினர்.  இந்த திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் வரவேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு
Nov 09, 2024, 05:11 IST/

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு

Nov 09, 2024, 05:11 IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பக்கத்தில், " 'பொலந்தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து' (நெடுநல்வாடை- 141). பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, வெம்பக்கோட்டை அகழாய்வில், 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.