ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சதுரகிரி கோவிலில் ஐயப்பசி மாத அமாவாசை பூஜையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோவில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐயப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அக். 29 ( இன்று) ஆம் தேதி முதல் நவ-2 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். இன்று நவ. 1 ஐயப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலில் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருவார்கள். மேலும் திடீரென மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் மலைப் பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.