ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் இரவில் இடிவுடன் கூடிய கனமழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி வன்னியம்பட்டி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில் வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சாலையில் பயணித்தனர். கன மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.