ஸ்ரீவி: பேரூராட்சியில் தவெக எதிர்த்து தீர்மானம்...

84பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் திராவிட மாடலுக்கு எதிராக பேசிய விஜயை எதிர்த்து மம்சாபுரம் பேரூராட்சியில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பேரூராட்சியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் திராவிட மாடலுக்கு எதிராக கருத்து தெரிவித்த அககட்சியின் தலைவர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சியானது 18 வார்டுகளை உள்ளடக்கியதாகும் 15 கவுன்சிலர்களுடன் மம்சாபுரம் பேரூராட்சியில் திமுக தலைவர் சுஜாதா மேரி தலைவராக உள்ளார். மம்சாபுரம் பேரூராட்சியின் கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்ற நிலையில் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் திராவிட மாடலுக்கு எதிராக செயல்படுவோம் என்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய துணைத் தலைவர் தங்கமாங்கனி மாநாட்டில் பெரியார் கட்அவுட்டை வைத்துக் கொண்டு திராவிடத்திற்கு எதிராக பேசும் விஜய் குழப்பத்தில் உள்ளதாகவும், விஜயின் திராவிட மாடலுக்கு எதிரான பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் அவரை கண்டித்து 15 கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி