ஸ்ரீவி: பெட்டிக்கடையில் பயங்கர தீ விபத்து...

74பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்டிக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பகுதியில் தென் திருப்பதி சீனிவாச பெருமாள் மலைக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலின் அடிவாரப் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் தேங்காய் பழம் எண்ணெய் விற்பனை செய்யப்படும் கடைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் அடிவாரப் பகுதியின் ராமர் என்பவர் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கடை நடத்தி வருகிறார். இன்று தீபாவளி தினத்தன்று கடையடைத்துவிட்டு ராமர் வீட்டுக்கு சென்ற நிலையில் திடீரென இவர் கடையிலிருந்து கரும்பு புகை வெளிவந்து. மேலும் காற்று வீசியதால் தீ பற்றி எறிய தொடங்கியது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கடையில் வைக்கப்பட்டு இருந்த தேங்காய், எண்ணெய், நெய்டின்கள் எரிந்து சேதமாகியது. விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி