சென்னையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையம், இந்தியாவிலேயே மிகப்பழமையான புத்தக நிலையமாகும். ஏபெல் யோசுவா ஹிக்கின்பாதம்ஸ் என்ற ஆங்கிலேய நூலகரால் 1844-ம் ஆண்டு இந்த புத்தக நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான புத்தக நிலையங்களில் ஒன்றான இந்த புத்தக நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது. ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையம் சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.