சாத்துார்: அகழாய்வில் இரும்பு ஈட்டி, மணிகண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இரும்பு ஈட்டி, சதுரங்க ஆட்டக்காய், சங்கு வளையல், மணி கண்டெடுக்கப்பட்டது. விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2400 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் சிறிய அளவிலான இரும்பு ஈட்டி, சதுரங்க ஆட்டக்காய், சங்கு வளையல், மணி கண்டெக்கப்பட்டது. மேலும் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், இங்கு முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது, உணவிற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட கருவிகள் தயாரித்துள்ளனர். அதன்படி சிறிய அளவிலான இரும்பு ஈட்டி தயாரித்து உள்ளனர். மேலும் பொழுது போக்கில் ஆர்வம் உள்ளதற்கு ஆதாரமாக சதுரங்க ஆட்டக்காய் கிடைத்துள்ளது என்றார்.