விருதுநகர்: குடும்பத்தோடு கொண்டாடிய தீபாவளி பண்டிகை...

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
விருதுநகர் மாவட்டத்தில் குடும்பத்தோடு கொண்டாடிய தீபாவளி பண்டிகை.
வானத்தை வண்ண மயமாக்கிய சிவகாசி வானவெடிகள்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. சிவகாசியில் நூற்றுக்கணக்கான வகைகளில், கண்களை கவரும் வானவெடிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விறுவிறுப்பாக விற்பனையாகி இருந்தது. பட்டாசுகள் வெடிக்க நேரக்கட்டுப்பாடு இருப்பதை அடுத்து, தீபாவளி நாளான இன்று காலை, பகல் நேரங்களில் வெடிக்கும் வெடி வகைகளை பட்டாசு பிரியர்கள் வெடித்து மகிழ்ந்தனர். இரவு நேரத்தில் பட்டாசுகள் வெடித்து வண்ண பூக்கோலங்களை வானத்தில் வரைந்தது போன்று வானவெடிகள் வெடித்து சிதறின. மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வானவெடிகள், கம்பி மத்தாப்பு, புஷ் வானம், தரை சக்கரம் ஆகிய வெடிகள் வெடித்து மகிழ்ந்தனர். மேலும் 25 ஷாட் முதல் 240 ஷாட் வரையிலான வானவெடிகள், அதிகமான உயரம் பறந்து சென்று வானத்தில் வெடித்து சிதறிய வானவெடிகள், விசிலிங் வகை வானவெடிகள், கிராக்கலிங் வானவெடிகள் என நூற்றுக்கணக்கான வகையிலான வானவெடிகளை வானத்தில் வெடித்து வண்ண மயமாக தீபாவளி பண்டிகையை, பட்டாசு பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி