அமைச்சர் ஏவ வேலு பேட்டி

82பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் மேம்பால பணிகள், சுற்றுவட்ட சாலைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை பணிகள் ஆகியவற்றை மாநில நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ வேலு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பணிகள் தரமாகவும், உரிய காலத்தில் கட்டி முடிக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும், ஒப்பந்தகாரர்களையும் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம், தரமான சாலைகள், சுற்றுவட்ட சாலைகள், மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், தமிழகத்திலேயே அதிக தரைப்பாலம் உள்ள மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் உள்ளதாகவும், இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் படும் சிரமத்தை போக்க அந்த பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்களாக தரம் உயர்த்தப்படுவதாகவும், தற்போது தென் தமிழகத்தின் வளர்ச்சியில் முதல்வர் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும், சாலை சந்திப்புகளில விபத்தினை தடுக்க வட்டச்சாலை அமைக்கும் பணிக்கான திட்டத்தை நடப்பாண்டு அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், கட்சி பாகுபாடு இன்றி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அந்த பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருதாகவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி