சாத்தூர்: திமுக கூட்டணி உடைகிறது. முன்னாள் அமைச்சர் மாஃபா....

50பார்த்தது
திமுக கூட்டணி உடைகிறது. முன்னாள் அமைச்சர்
மாஃபா. பாண்டியராஜன் சாத்துாரில் பேட்டி.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது மற்றும் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர், மாஃபா. பாண்டியராஜன்,
த. வெ. க மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசியதில் முதன்மையாக பார்ப்பது ஊழல் அரசாங்கம் மற்றும் வாரிசு அரசியலை உள்ளடக்கிய அரசாங்கம் மிகத் தெளிவாக ஆளும் திமுகவை பற்றி பேசியதோடு முதல் எதிரி திமுக என பேசியதை அதிமுக வரவேற்கிறது என்றார். தவெக மாநாட்டில் கொள்கை நிலைப்பாட்டில் வெளிப்படுத்து கின்ற முதல் பேச்சிலேயே போலி திராவிட மாடல் அரசை எதிர்த்து குரல் கொடுத்து உள்ளதை அதிமுக முக்கியமாக பார்க்கிறது என்றார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர், என். டி ராமராவ் பற்றியும் கூத்தாடி என அன்றைய காலத்தில் எம்ஜிஆரை விமர்சித்த கலைஞர் கருணாநிதி பேசி உள்ளதை மேற்கோள் காட்டி நடிகர் விஜய் பேசியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். மேலும் கூட்டத்திற்கு நகர, ஒன்றிய அதிமுக ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி