

இராஜபாளையம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது...
இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் செட்டியார்பட்டி காய்கறி மார்கெட் முன்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் செட்டியார்பட்டியை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய இராஜேந்திரன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 450/- கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.