

இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 20 கிராம் கஞ்சா பறிமுதல். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி அருகே வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அஜித்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.