திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், “இப்போ நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. சினிமாவை பார்த்துவிட்டு நடிகர்களை அங்கேயே மறந்துவிட வேண்டும். அதன் பிறகு கட்சிதான் ஞாபகத்திற்கு வர வேண்டுமே தவிர நடிகர்கள் ஞாபகம் வரக்கூடாது” என தவெக விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.