இராஜபாளையம்: யானைகள் வருவதை தடுக்க அகழி அமைக்கப்படும்- வனத்துறை

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வனச்சரக மலையடி வார வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவதை தடுக்க 20 கி. மீ தூரத்திற்கு அகழி வெட்டும் பணி துவங்கியுள்ளதாக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்து உள்ளார். 

கடந்த மூன்று மாதத்திற்கு மேலாகஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மலையடிவார பகுதியான ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத் தோப்பு,பந்தப்பாறை, ரங்கர் கோயில், ரங்கர் தீர்த்தம் பகுதிகளில் யானைகள் தோப்புகளில் புகுந்து மா, தென்னை, வாழை, கரும்பு, கொய்யா பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் மலையடிவாரத்தில் அகழி வெட்ட வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், இராஜபாளையம் வனச்சரகத்தில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கும். 3 மீட்டர் அகலத்திற்கும், 2 மீட்டர் ஆழத்திற்கும் அகழி வெட்ட வனத்துறை திட்டமிட்டுள்ளது.தற்போது பந்தப்பாறை பகுதியிலிருந்து அகழி வெட்டும் பணி துவங்கி உள்ளதாக புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி