புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொடிவயல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி இனியவள். இவர், மீது சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இனியவள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுமி பலியானது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.