ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் விழிப்புணர்வு டூவீலர் பேரணி நேற்று டிச.8 தென்காசி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திலிருந்து முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி. இராஜேந்திரபாலாஜி பேரணி துவக்கி வைத்தார். மேலும் இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தனியார் மண்டபத்தில் முடிவடைந்தது.
மேலும் இந்நிகழ்வின் போது இளைஞர், இளம் பெண் பாசறை மாவட்ட செயலாளர் முத்துராஜ் மற்றும் நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.