இராஜ: பழங்குடியினர் வசிக்கும் மலையில் மனித உரிமை ஆணையம் ஆய்வு

73பார்த்தது
இராஜ: பழங்குடியினர் வசிக்கும் மலையில் மனித உரிமை ஆணையம் ஆய்வு
இராஜபாளையம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மாநில மனித உரிமை ஆணையக உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோவில் அருகே வசிக்கும் பழங்குடியினரிடம் மனித உரிமை ஆணையக உறுப்பினர் கண்ணதாசன், அடிப்படை வசதிகள் குறித்து இன்று டிச. 7 ஆய்வு செய்து குறைகளைக் கேட்டு அவர்கள் வசிப்பிடத்தைப் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களைத் தற்போது சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். 

மேலும் 35 ஆண்டுகளாக வாழ்விடத்திற்காக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இடப்பற்றாக்குறையால் தற்காலியமாகப் பிளாஸ்டிக் செட்டுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியில் வாழ்கின்ற இந்த மக்கள் பாதுகாப்பாக இதே இடத்தில் வாழ்வதற்கான உரிமை பெற்றவர்கள். இங்கு கிடைக்கும் தொழிலை நம்பி வாழ்கின்றனர். இவர்கள் குடியிருப்பைப் பராமரிக்க வனத்துறை சார்பில் ஆட்சேபம் உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் அதே இடத்தில் வாழ்வதற்கும் வனச்சட்டங்கள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தவும் அரசிடமும், வனத்துறையினரிடமும் பேசித் தீர்வு காணப்படும் என்று கூறினார். ஆய்வின் போது ஆதிதிராவிடப் பழங்குடியினர் நலத்துறைத் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி